பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.   நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை…

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

இதையடுத்து, சட்டத்திருததம் கொண்டு வர வழிகாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா செப்டம்பர் 2021 இல் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் பதிவுத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.