ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க சட்டத்தில் திருத்தம்

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கான சலுகைகள் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம்,…

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கான சலுகைகள் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1958 இல் திருத்தம் செய்து, ஓய்வுக்குப் பின் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஓய்வுபெற்ற பிறகு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லம் தவிர்த்து VII வகை இலவச (வாடகை இல்லாத) வீடு, ஒரு வருடத்திற்கு செயலக உதவியாளர், ஓட்டுநர், 24/7 என தனிப்பட்ட பாதுகாவலர்களின் பாதுகாப்பு பெறலாம்.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி, விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் ஓய்வெடுக்க அனுமதி வழங்குகிறது.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள்,  ஓய்வு பெற்ற நாள் முதல் 24 மணி நேரமும் பாதுகாப்பைப் பெறுவார்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.