மத்தியப் பிரதேசத்தின் சத்தபூர் மாவட்டத்தில் உள்ள பாரி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்.11) அன்று இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி டாக்டர் அம்பேத்கரின் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் ஒன்றாக நிதி திரட்டி உத்தரப் பிரதேசத்திலிருந்து 1½ உயரமுள்ள அம்பேத்கரின் சிலையை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் 18 அங்குல உயரம் கொண்ட இந்த கற்சிலை நேற்று காணாமல் போய் உள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக கிராம மக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருட்டு வழக்குப்பதிவு செய்த கர்ஹி – மல்ஹாரா காவல்நிலைய போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிறுவப்பட்ட இரண்டு நாட்களிலேயே அம்பேத்கர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








