அமேசானில் மாட்டு சாணம் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்: சுவை குறித்து சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்!

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட ஒருவர், அதன் சுவை குறித்து கருத்து பதிவிட்டு வினோத சம்பவம் நிகழுந்துள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது…

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட ஒருவர், அதன் சுவை குறித்து கருத்து பதிவிட்டு வினோத சம்பவம் நிகழுந்துள்ளது.

உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. மொபைல் போன், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் தேவையான அனைத்து பொருட்களையும் அமேசான் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக அமேசானில் மாட்டு சாண கேக்குகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார் ஒரு வாடிக்கையாளர். அதனை சாப்பிட்டதோடு, சுவை குறித்த தனது விமர்சனத்தையும் அமேசான் கருத்துக்கான பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு ஸ்டார் மட்டுமே கொடுத்த அந்நபர், மாட்டு சாண கேக்கினை சாப்பிட்டுப் பார்த்தபோது அதன் சுவை மிக மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். சேறு போல சுவை இருந்ததாகவும், அதனை வாங்கியபோது பார்சல் பிரிக்கப்பட்டு இருந்தது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனை ஸ்கீரின் ஷார்ட் எடுத்து டிவிட்டரில் பதிவிட்ட சஞ்சய் அரோரா என்பவர், “இதுதான் இந்தியா..நான் இந்தியாவை நேசிக்கிறேன்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், அமேசான் பக்கத்தில் மாட்டு சாண வரட்டிக்கு ஹோமம் வளர்த்தல், பூஜை செய்தல் உள்ளிட்ட மத விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியது என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கேலி செய்வதற்காகக் கூட அவ்வாறு பதிவிட்டிருக்கலாமோ என்ற சங்தேகமும் ஒரு பக்கம் எழத்தான் செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply