வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பும் ‘அமரன்’ – 10 நாட்களில் ரூ.200 கோடி வசூல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த அமரன் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அமரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தீபாவளிக்கு வெளிவந்த அமரன் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவான இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்து இருந்தார்.

மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெற்றியடைந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 195 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் அமரன் படம் தமிழகத்திலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை அமரன் படம் செய்துள்ளது. 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளது. நாளை ரூ. 100 கோடியை கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.