வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும்  ரூ1000 கொடுக்க வேண்டும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும்  ரூ1000 கொடுக்க வேண்டும்  என தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கோவை, விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:…

வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும்  ரூ1000 கொடுக்க வேண்டும்  என தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கோவை, விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

“கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். மகளிர் உரிமை திட்டத்தைப் பொருத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், ஆட்சியில் தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கக் கூடிய விஷயம். தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் நல்ல அரசுக்கு அடையாளம்.  எனவே, வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ1000 கட்டாயம் வழங்க வேண்டும்.

நான் தற்போது பாலக்காட்டில் என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜை கலந்து கொள்ளத்தான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25-ம்  நடைபெற உள்ளது. கேப்டன் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களைக் கட்டாயம் அவர் சந்திப்பார்.

மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைப் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, அதற்குப்பிறகு தேர்தலுக்கு கூட்டணியா, இல்லையா என்பதை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார். மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள்,  யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.