வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல”
என்றும்,காவல்துறை பொய்யான காரணங்களை கூறி இளைஞர்கள் மீது தடியடி
நடத்தியுள்ளதாக யூடிபர் டிடிஎப் வாசன் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் செந்தில் செல்வம்
என்ற இயக்குநரின் அலுவலக திறப்புக்காக சிறப்பு விருந்தினராக யூடிபர் டிடிஎப்
வருகை தந்தார்.அவரைக்கான பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அப்பகுதியில் குவிந்து பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.இதற்காக காவல் துறை அறிவிப்பு கொடுத்தும் கலையாத அவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் விதிமுறைகளில் மீறி செயல்பட்டதாக டிடிஎப் வாசன், இயக்குநர் செந்தில் செல்வம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த நிகழ்வு தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள யூடிபர் டிடிஎப் வாசன்,பொய்யான காரணங்களை கூறி மாணவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும், வழக்குப்பதிவெல்லாம் எனக்கு துணிக்கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல் என்றும், எனக்கு நிச்சயம் ஒரு காலம் வரும் எனவும் வழக்குப்பதிவெல்லாம் எனக்கு வழக்கமான ஒன்று தான் என் அவர் தெரிவித்துள்ளார்.
44 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் எதிர்காலத்தில் இதற்கான அனைத்துவிடைகளும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.