உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை டெல்லியில் தமிழ்நாடு சிறப்புக் குழுவினர் சந்தித்து பேசினர்.
உக்ரைனிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 444 தமிழ்நாட்டு மாணவர்களை, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு உறுப்பினர்களான எம்பிக்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராச்சாமி ஆகியோர் சந்தித்து பேசினர். மாணவர்களின் நலனை விசாரித்த அவர்கள், இதுவரை 777 தமிழ்நாட்டு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அங்குள்ள அனைத்து மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர். தொடர்ந்து, மாணவர்களை டெல்லியிலிருந்து அழைத்து செல்ல தனி விமானத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: உக்ரைன் – வடமாநிலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் – தமிழக மாணவி குற்றச்சாட்டு
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாட்டின் சிறப்பு குழுவினர் சந்தித்தனர். அதன் பின் பேசிய, எம்.பி. திருச்சி சிவா, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அனைவரையும் நாளைக்குள் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








