எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 71 மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி, அதன்முலம் கிடைக்கப்பெற்ற கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வார்கள்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
அதன் கலந்தாய்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது www. mcc.nic.in என்கிற இணையதளத்தில் வெளியானது. இதில் நீட் தேர்வில் முழு மதிப்பெண் ஆன 720 வாய்ப்பிற்கு 720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த தமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் ஜெ.ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடம் பெற்றார். அதன் பின் நீட் தேர்வில் 715 மதிப்பெண் எடுத்து ஆறாவது இடம் பிடித்த சென்னையை சேர்ந்த மாணவர் என்.சூர்யா சித்தார்த் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியிலும் மருத்துவ சீட் பெற்றனர்.







