அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – பலி எண்ணிக்கை உயர்வு

நடந்து முடிந்த உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததுள்ளது

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது

இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில்  காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறிப்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் காளையைப் பிடிக்க முயன்ற போது காளை குத்தியதில் நவீன்குமார் எனும் மாடுபிடி வீரர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள்  சேகரிக்கும் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி என்ற முதியவரை காளை கழுத்தில் குத்தியதில் உயிரிழந்தார். மேலும் தேனியைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் காளை சேகரிக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்த போது காளை முட்டி பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக  அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்  மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த செல்வமுருகன் தற்போது உயிரிழந்துள்ளார். தொடர்ந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வக்குமாருடன் சேர்த்து மொத்தமாக ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்ததுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.