பழம்பெரும் கலைஞரும் டிராகன் பால் படைப்பாளருமான அகிரா டோரியாமா தனக்குப் பிடித்த கருவியை இழந்த பிறகு, இனி மங்கா வரைவதில்லை என முடிவெடுத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அனிமே ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலமான ஜப்பானிய அனிமே தொடர்தான் ’டிராகன் பால்’. 1980 களின் நடுப்பகுதி மற்றும் 1990 களின் நடுப்பகுதியில் மங்கா வெளியீட்டை புதிய உயரத்திற்கு உயர்த்திய நீண்ட நெடிய தொடர்களில் டிராகன் பாலும் ஒன்றாகும். இது அதன் பரபரப்பான ஆக்ஷன்-சாகசக் கதைக்காகவும், மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளுக்காகவும் அறியப்படுகிறது.
Akira Toriyama has used the same pen for 51 years! He bought this pen holder when he was 14 years old, and has used it to ink every manga he’s ever drawn, including DBZ. But because his office is so messy, he often has to search for it before working. #DragonBallCultureDaily pic.twitter.com/djplflPYpQ
— Derek Padula (@derekpadula) November 11, 2020
இந்த அனிமே கதாபாத்திரத்தைத் தனது வரைகலையால் பிரபலப்படுத்தியவர் தான் ’அகிரா டோரியாமா’. டிராகன் பால் உருவாக்கியவர் அகிரா டோரியாமா தனது தனக்கு பிடித்த பேனா ஹோல்டரை தொலைத்ததால் துரதிர்ஷ்டவசமாகக் கருதியுள்ளார். இதையடுத்து, அனிமே வரைவதையே கைவிட்டுள்ளார்.
அவர் இந்த உபகரணத்தைத் தனது வாழ்க்கையின் மதிப்பு மில்ல அங்கமாக வைத்திருந்தார். அவர் 14 வயதாக இருந்தபோது அதை வாங்கினார். இந்த பேனா ஹொல்டர், மங்கா கலைஞராக அவரது முழு வாழ்க்கையிலும் அவருடன் இருந்தது.
டோரியாமா தனது மாங்கா தொடரின் வரவிருக்கும் புதிய அத்தியாயமான ’சாண்ட் லேண்டில்’ பணிபுரியும் போது தனது வரைதல் கருவியைத் தவறவிட்டுள்ளார்.







