பாய்ச்சலுக்கான பத்தாவது ஆண்டில் நியூஸ் 7 தமிழ் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இயக்குநர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சினிமா திரைப் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.
நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.
நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் :
செய்திகளை உடனுக்குடன் வழங்கி நற்பெயரை பெற்றுள்ள நியூஸ் 7 தமிழ் ஒன்பதாவது ஆண்டை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும் நூறு ஆண்டுகள் செவ்வென இந்த தொலைக்காட்சி செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பா.ரஞ்சித் :
”10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துகள். நிறைய நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்துருக்கிறது. முக்கியமான , நடுநிலைநான சேனலாக நியூஸ் 7 தமிழை பார்க்கிறேன். தொடர்ந்து இந்த சேவையை தொடர நியூஸ் 7 தமிழ்க்கு என்னுடைய வாழ்த்துகள்.”
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் :
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.