“லைகாவை காணவில்லை…கண்டுபிடிச்சு கொடுத்தா சன்மானம்!” கொந்தளித்த அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பேனர் அடித்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர்.  அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி.  லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது.…

நடிகர் அஜித்தின் ரசிகர்கள், பேனர் அடித்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர். 

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி.  லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா.

அதுமட்டும் இல்லாமல் அஜித்துடன் அர்ஜுன்,  த்ரிஷா, ஆ ரவ்,  ரெஜினா உள்ளிட்ட பல மல்டி ஸ்டார்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது.  ஆனால்,  கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் விலகியதால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார்.

இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பிளான் செய்து வைத்திருந்ததை விட தாமதமாக தொடங்கியது.  ஆனாலும் படப்பிடிப்பை பிரேக் விடாமல் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் எடுத்து வந்தார் மகிழ் திருமேனி.  திரைப்படத்தின் படப்பிடிப்பு  அஜர்பைஜானில் எடுக்கப்பட்டது.

இதனிடையே எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் கடந்த 23 ஆம் தேதி புதுச்சேரி திரையரங்குகளில் வெளியானது.  இந்த நிலையில், அப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்,  “லைக்காவை காணவில்லை.. விடாமுயற்சி அப்டேட் விட்டு 300 நாளாச்சு.  படத்தோட அப்டேட் என்னாச்சு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்”  என பேனர் கொண்டு வந்து நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.