அஜர்பைஜானில் 230 கி.மீ வேகத்தில் பறந்த அஜித்!

நடிகர் அஜித் அஜர்பைஜானில் 230 கி.மீ வேகத்தில் கார் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…

நடிகர் அஜித் அஜர்பைஜானில் 230 கி.மீ வேகத்தில் கார் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘விடாமுயற்சி’.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் எடுத்து முடிக்கப்பட்டது.

இதனையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பும் தற்போது அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதனையடுத்து படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இதுதொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வப்போது அப்டேட்டாக வழங்கி வருகிறார் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா.  அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்புக்கு இடையில் அங்குள்ள ரேஸ் கார் ஓட்டும் இடத்திற்கு சென்ற அஜித், 230 கி.மீ வேகத்தில் கார் ஒன்றை இயக்கியுள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . சில மாதங்களுக்கு முன் விடாமுயற்சி படப்பிடிப்பில் ஏற்பட்ட கார் விபத்தில் காயமடைந்த அஜித் , மீண்டும் பயமில்லாமல் காரை இவ்வளவு வேகத்தில் இயக்கியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.