இதல்லாம் நாங்க தீனா’லே பாத்தாச்சு… லியோ பட டெம்ப்ளேட்டை வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்!

லியோ பட டெம்ப்ளேட்டை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.   அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித் குமார்.  பல படங்களில் சாக்லேட் பாயாகவும், கதாநாயகியின் பின்னால் சுற்றி அவரை காதலிக்கும்…

லியோ பட டெம்ப்ளேட்டை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  

அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித் குமார்.  பல படங்களில் சாக்லேட் பாயாகவும், கதாநாயகியின் பின்னால் சுற்றி அவரை காதலிக்கும் தமிழ் சினிமாவின் அக்மார்க் வேடத்தில் நடித்தார்.  சரணனின் அமர்க்களம் திரைப்படத்தில் ஒரு ரவுடியாக நடித்து ஆக்‌ஷன் ரூட்டுக்குக் மாறினார்.

அதன் பின்னர், அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தீனா. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.  அஜித்தின் இண்ட்ரோ சீனிலிருந்து படம் முழுவதும் அவரை பக்கா மாஸாகவும்,  கமர்ஷியலாகவும் ஏ.ஆர். முருகதாஸ் காட்சிப்படுத்த படம் மெகா ஹிட்டானது.

அந்தப் படத்திலிருந்து தான் அஜித்திற்கு தல என்ற பட்டம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தீனா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் பல திரைப்படங்களை ஏ ஆர் முருகதாஸ் இயக்குநர் என செய்திகள் வெளியானது. ஆனால் கடைசி வரை இது நடக்கவில்லை.

இந்நிலையில்,  சமூக வலைதளம் முழுவதும் லியோ படம் குறித்த செய்திகள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.  மேலும்,  விஜய்யின் லியோ படம் உலக அளவில் முதல் நாள்  ரூ.73 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.  இத்தனைக்கும் ஸ்பெஷல் ஷோ எதுவும் இல்லாமலே லியோ படம் வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும்,  இந்த திரைப்படம் மற்ற ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.  அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இரண்டாம் பாதி மிகவும் தோய்வாகவே இருந்தது.  மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் பார்த்திபன் மற்றும் லியோ என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  இதில் யார் லியோ யார் பார்த்திபன் என்பதே இந்த படத்தின் மூலக்கதை.

அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் வரை பார்த்திபன் கதாபாத்திரம் நான் லியோ இல்லை என்று கூறி கொண்டே இருக்கும்.  ஆனால்,  படம் பார்க்கும் போது இவர்தான் லியோ என்பதை ரசிகர்கள் எளிதாக கணிக்கும் வகையிலேயே காட்சி அமைப்பு அமைந்திருந்தது. இப்படி பல விஷயங்கள் எளிதாக கணிக்க கூடிய வகையில் இருக்கும் நிலையில் லியோ குறித்து வரும் பிளாஷ் பேக் காட்சிகள் போலியானது என்ற புதிய கணிப்புகளை விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிளாஷ் பேக் காட்சி ஒன்றில் வில்லன் சஞ்சய் தத் கூறும் வசனத்தை வைத்து மீம் டெம்ப்ளேட் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  இப்படி இருக்கையில் இந்த டெம்ப்ளேட்டை வைத்து அஜித் ரசிகர்கள் தீனா படத்துடன் லியோ படத்தை ஒப்பிட்டு இணையத்தில் பல பதிவுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் படு வைரலாக பரவி வருவோரது.

அவற்றில் சில:  

https://twitter.com/veeraragavan45/status/1717047775156670852

 

https://twitter.com/SurendarAKs/status/1716848347942977582

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.