இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் புதிய படத்தின் போஸ்டர் மற்றும் பெயரை நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் கார்த்திக். இவர் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து திட்டம் இரண்டு படத்தினை இயக்கியுள்ளார். அதன்பின் ஜி.வி. பிரகாஷ், கௌரி கிஷன் நடித்த அடியே படத்தை இயக்கியுள்ளார். அடியே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நட்பதிகாரம் 79, குற்றம் நடந்தது என்ன, சோலாபூரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மூன்றாவதாக தற்போது புதிய திரைப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார். இதற்கு ஹாட்ஸ்பாட் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம் இவர்களுடன் நடிகைகள் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது.
https://twitter.com/aishu_dil/status/1758419801104589047
இந்த படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். மேலும், “இது மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஹாட் ஸ்பாட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். படக்குழுவிற்கு வாழத்துகள்” எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







