ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் 4ஜியை விட 20 ல் இருந்து 30 மடங்கு வேகம் அதிகளவில் இருக்கும் இது குறித்த டெமோ காட்சிகள் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை சாந்தோம் பகுதியில் ஏர்டெல் நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையின் டெமோ காட்சிகள் இன்று அங்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காகக் காண்பிக்கப்பட்டது. சென்னை உட்பட 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையானது துவங்கி இயங்கி வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் மட்டும் பெசன்ட் நகர், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், உள்ளிட்ட 12 இடங்களில் 5g சேவையானது தொடர்ந்து கிளைகளாக செயல்படுகிறது. 5g சேவையின் தகவல்களைச் சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பயன்படுத்தும் 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வேகம் அதிக அளவில் இருக்கும். இதனால் மிகப்பெரிய வீடியோ காட்சிகளை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்வதற்கான ஆற்றலும் உடையது. விரைவில் 5g பிளஸ் நெட்வொர்க்கின் சேவையானது தமிழகம் முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.







