ஜெ.பி.நட்டா சொந்தத் தொகுதியில் தான் எய்ம்ஸ் 95% பணிகள் முடிந்துள்ளன; சு.வெங்கடேசன்

ஜெ.பி.நட்டா சொந்த தொகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவிகிதம் முடிந்துள்ளதாக எம்பி சு.வெங்கடேன் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம்…

ஜெ.பி.நட்டா சொந்த தொகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவிகிதம் முடிந்துள்ளதாக எம்பி சு.வெங்கடேன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை தந்தார். அவர் காரைக்குடி பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மதுரை எய்ம்ஸின் பூர்வாங்க பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரை எய்ம்ஸ் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று, 95 சதவிகித பணிகள் நிறைவடைந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

https://twitter.com/SuVe4Madurai/status/1577157333456588801

இதனை குறிப்பிட்டு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
உண்மையாகவே 95% பணி முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

அதேசமயம், 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜெ.பி.நட்டா சொன்ன 95 சதவிகிதப் பணி அவர் எம்எல்ஏவாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாலை தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.