அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று காலை திருநெல்வேலியில் காலமானார். அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், கடந்த 2000ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார்.
2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2016ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்தார்.







