தண்டையார்பேட்டையில் 1 டன் தக்காளியை பொதுமக்கள் 1000-பேருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இலவசமாக வழங்கினார்.
ஆர்.கே.நகர் பகுதிக்கு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு பகுதியில்
தி.மு.க. அரசின் தக்காளி விலை உயர்வைக் கண்டித்து 1-டன் தக்காளியை வடசென்னை
வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இலவசமாக வழங்கினார். பகுதியில் உள்ள பெண்கள் ஆண்கள் முதியோர் உள்ளிட்டோர் வந்து நீண்ட வரிசையில்
நின்று தக்காளிகளை தங்களது வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் தொகுதி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதி. எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்களுக்குப் பாதிப்பு வருகிறதோ எப்போதெல்லாம் மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது தான் அ.தி.மு.க. வின் கடமை.
மக்களுக்காக நேற்று முன்தினம் 38-வது வட்டத்தில் 500-கிலோ தக்காளி 500-குடுப்பங்களுக்கு வழங்கியுள்ளோம் இன்று 42-வது வட்டத்தில் 1-டன் தக்காளியை
1000-குடும்பங்களுக்கு வழங்குகிறோம். இனி ஒவ்வொரு வட்டத்திலும் இது மாதிரியான
பணிகள் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து
நடைபெறும்.
இது விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை கடமை உணர்வோடு செய்கிறோம். இது
தி.மு.க ஆட்சிக்கு மக்கள் புகட்ட போகும் பாடம். அன்றைய கொரோனா காலகட்டத்தில்
அ. தி.மு.க. அரசு வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மக்களுக்காக செயல்படக்கூடிய அரசு வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்ட
போது எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்
தட்டுப்பாடின்றி மக்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் தக்காளி உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில்
விலையை கட்டுப்படுத்த ஆளும் கட்சி தவறிவிட்டது. விரைவில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் மக்கள் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவோம் என இவ்வாறு
தெரிவித்தார்.







