ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பின் தங்கலான் மிக சவாலாக இருந்தது – ஜி.வி.பிரகாஷ்

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு தங்கலான் எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்த திரைப்படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப்…

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு தங்கலான் எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்த திரைப்படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் விக்ரம் குணமாகிய நிலையில் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் தங்கலான் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவானதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டீசர் வெளியீடு தொடர்பாக சென்னையில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில்  ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது: 

தங்கலான் அனைவருக்கும் சிறந்த படமாக இது இருக்கும்.  விக்ரம் இப்படத்தில் மிகவும் அதிகமாக மெனக்கெட்டு உள்ளார்.  உலகளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். ரஞ்சித்தின் ஒவ்வொரு படத்திலும் அவரது லெவல் மேலே சென்று கொண்டு உள்ளார். ரஞ்சித்,  தோனி‌ மாதிரி கூலாக உள்ளார்.‌ எதற்கும் அசரமாட்டார்.  தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் இப்படத்திற்கு பலமாக உள்ளது.  ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இப்படம் எனக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.