ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாவுருட்டி அருவி திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் அச்சன் கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டி அருவி 5 ஆண்டுகளாகக் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதனால், அந்த அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அருவி திறக்கப்பட்டுள்ளது. இந்த அருவி முழுக்க முழுக்க கேரளா வனத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,05,000 கன அடியாக அதிகரிப்பு’
சுமார் 20 லட்சத்துக்கு மேல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இரு மாநில சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அங்குள்ள கடைக்காரர்கள் இதுகுறித்து தெரிவிக்கும்போது இதனால், தங்கள் வாழ்வாதாரம் பெருகும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.








