முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் நிலநடுக்கம்- ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் சர்வதேச சேவை அமைப்புகள் ஆப்கானைவிட்டு வெளியேறியதால் அந்நாட்டு மக்களுக்கு சர்வதேச நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அலகுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிழே மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்து தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்,  பாக்டிகா, கோஸ்ட்  உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கிராமப்பு மலைப்பிரதேச பகுதிகளான அங்கு பழையான வீடுகள் அதிகம் நிறைந்திருக்கும். இதனால் 6.1 ரிக்டரிலேயே அதிக அளவு  வீடுகள் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது நிலச்சரிவுகளால் பாதிக்கப்படும் அந்த பகுதிகளில்  தற்போது இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு ஆப்கனிலிருந்து சர்வதேச சேவை அமைப்புகள் பல வெளியேறிவிட்டதால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்கனை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு அந்நாட்டு மக்கள்  பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அவர்களின்  துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கீழடி, கொற்கை அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவு

Halley Karthik

பயணியை எட்டி மிதித்த போலீஸ் – சஸ்பெண்ட்

Saravana Kumar

ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…