‘லால் சலாம்’ படத்தின் ‘ஏ புள்ள’ பாடல் வெளியானது! – இணையத்தில் வைரல்…

லால் சலாம் படத்தின் 2வது பாடல் ‘ஏ புள்ள’ வெளியானது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு…

லால் சலாம் படத்தின் 2வது பாடல் ‘ புள்ள’ வெளியானது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏ..புள்ள’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இசையில் கபிலன் எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.