முக்கியச் செய்திகள் தமிழகம்

மூத்த நிர்வாகிகள் சமாதான முயற்சி- அதிமுகவில் அமைதி திரும்புமா?

ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை நீடித்து வரும் நிலையில்  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஓபிஎஸ், இபிஎஸ் இடையே சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.  

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை வரும் 23ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,  அந்த கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய  தீர்மானங்கள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு நிலவிவருவதாக கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வருவதை  ஏற்க மறுத்து, ஓபிஎஸ் தொடர்ந்து ஒருவாரமாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே அதிமுக மூத்த நிர்வாகிகளான  தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று ஓ.பன்னீர்செல்வத்தை  அவரது இல்லத்தில்  தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இரட்டைத் தலைமை என்ற நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை என அவர்களிடம் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. எனினும் இரு தலைவர்களையும் நேரில் சந்திக்க  வைத்தால் இந்த பிரச்னைக்கு  சுமூக தீர்வு கண்டு அதிமுகவில் அமைதியை கொண்டுவரலாம் என எண்ணும் மூத்த நிர்வாகிகள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுமூக நிலை விரைவில் எடப்படும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொண்டர்கள் குவிந்து முழக்கங்களை எழுப்பியது, ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து வந்து ஆலோசனை நடத்தியது என  சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகள் இன்றும் பரபரப்பாகவே காணப்பட்டன.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம் அது காலத்தின் தேவை என்று கூறினார். பெரும்பாலான  கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமையை
விரும்புவதாகக் கூறிய ஓ.எஸ்.மணியன்,  சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் உள்பட 75 எம்.எல்.ஏக்களை வெற்றி பெறச் செய்த எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை திறன் குறித்து கேள்வி எழுப்பத் தேவையில்லை என்றார். அதிமுக சட்டப்பிரிவுவை சேர்ந்தவரும்,  முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை,  அக்கட்சியில்  ஒற்றை தலைமையை ஏற்படுத்துவதில் சட்டரீதியில் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறினார்.

இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பினார். அவர் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.  ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர், எம்.ஏ சூசை சந்தித்து ஆதரவை தெரிவித்தார். அதிமுகவிற்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவாக இந்திய குடியரசு கட்சி இருக்கும் என எம்.ஏ. சூசை உறுதியளித்தார். அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படுமா அல்லது இரட்டை தலைமை தொடருமா  என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவமனையிலிருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் விஜய்காந்த்

Arivazhagan CM

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

Ezhilarasan

ஆறுமுகசாமி ஆணையம்; ஓ.பன்னீர் செல்வம், இளவரசி இன்று ஆஜர்

Saravana Kumar