Netflix இன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான “லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் திரையரங்குகளில் படம் வருவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்பை போலவே ஓடிடி தளங்களில் படம் வெளியாவதற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
இந்நிலையில், Netflix இன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான “லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஆடம் சாண்ட்லர் 74 வயதான லியோ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , மேலும் பில் பர் லியோவுடன் வாழும் ஸ்கிர்ட்டில் என்ற ஆமையாக நடிக்கிறார்.
புளோரிடாவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறையின் உள்ளே, ஒரு வயதான பல்லி (லியோ) மற்றும் ஊக்கமில்லாத ஆமை, வகுப்பின் செல்லப்பிராணிகளாக ஒன்றாக வாழ்கின்றன. இருவரும் வகுப்பறையில் தலைமுறை தலைமுறையாக மாணவர்களைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்போது லியோ தொட்டியிலிருந்து வெளியேறி வெளி உலகத்தை அனுபவிக்க விரும்புகிறார். தான் வாழ இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது என்பதை லியோ அறிந்ததும், அவர் உடனடியாக தப்பிக்க முயற்சிக்கிறார். அப்போது என்ன நடக்கிறது என்பது தான் கதை.
திரைப்படத்தை ராபர்ட் ஸ்மிகல், ராபர்ட் மரியானெட்டி, மற்றும் டேவிட் மரியானெட்டி ஆகியோர் இயக்கியுள்ளனர். சாண்ட்லரின் தயாரிப்பு நிறுவனமான ஹேப்பி மேடிசன் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட Netflix இன் 2023 வெளியீட்டு அட்டவணையில் `லியோ’ சேர்க்கப்பட்டுள்ளது. “லியோ” நவம்பர் 21, 2023 முதல் Netflix இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







