மயோசிடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடிகை சமந்தா நடித்து முடித்தார்.
தற்போது மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின. எனவே புதிதாக ஒப்பந்தமாகவிருந்த படத்திற்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Thrilled to introduce the newest face of change! We're excited to have Samantha Ruth Prabhu on board as the brand ambassador for Myositis India. Together, we're stepping forward to raise awareness, inspire hope, and make a difference in the lives of those battling myositis. pic.twitter.com/S6P8CywXFn
— Myositis India (@Myositis_India) August 25, 2023
இந்நிலையில், மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மயோசிடிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், மயோசிடிஸ் நோய் குறித்து நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என்று மயோசிடிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.