கேரள கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை பிரியாமணி!

நடிகை பிரியாமணி,  பீட்டா அமைப்புடன் இணைந்து கேரளாவில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.  தமிழில் பருத்திவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியாமணி.  இதற்காக சிறந்த நடிகைக்கான…

நடிகை பிரியாமணி,  பீட்டா அமைப்புடன் இணைந்து கேரளாவில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார். 

தமிழில் பருத்திவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியாமணி.  இதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.  இதையடுத்து தெலுங்கு,  இந்தி போன்ற மொழிகளிலும் நடித்த பிரியாமணி தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.  இவர் கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார்.

கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும்விதமாக இயந்திர யானைகளை கோயில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியாமணியும், பீட்டாவும் இணைந்து கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு ஒரு இயந்திர யானையை பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த யானைக்கு மகாதேவன் எனவும் பெயரிட்டு உள்ளனர்.  இது குறித்து நடிகை பிரியாமணி கூறுகையில், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள்,  விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் நமது வளமான கலாசார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்.  இயந்திர யானையை பீட்டா அமைப்புடன் இணைந்து நன்கொடையாக வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.