#GOAT படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மீனாட்சி சௌத்ரி!

விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை நடிகை மீனாட்சி சௌத்ரி பகிர்ந்துள்ளார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி…

Actress Meenakshi Chaudhary shared BTS photos from 'The G.O.A.T'

விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை நடிகை மீனாட்சி சௌத்ரி பகிர்ந்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த 5ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படியுங்கள் : #Fukushima அணு உலையில் எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ரோபோட்

அதன்படி, விடுமுறை அல்லாத நாள் என்பதால், வெள்ளிக்கிழமை குறைந்த தி கோட் படத்தின் வசூல், விடுமுறை நாளான சனிக்கிழமை மீண்டும் அதிகரித்தது. அதன்படி உள்நாட்டில் சுமார் 33 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்படி தமிழ்நாட்டில் ரூ.29.1 கோடி, தெலுங்கு வெர்ஷனில் ரூ.1.75 கோடி மற்றும் வடமாநிலங்களில் ரூ.2.15 கோடி வசூலும் அடங்கும்.  இதன் மூலம் வெளியான மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து தி கோட் படத்தின் 4வது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 4வது நாளில் மொத்தமாக 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணா கல்பாத்தில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் தி கோட் திரைப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது தி கோட் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை நடிகை மீனாட்சி சௌத்ரி பகிர்ந்துள்ளார். தொடர்ந்து தி கோட் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ The G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே கனவு இல்லை; இன்னும் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகிறேன். படப்பிடிப்பை சிறந்த அனுபவமாக மாற்றியதற்காக ஒட்டுமொத்த படகுழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீநிதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பிற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.