மனைவிக்கு பெட்டிக்கடையில் ஐஸ் கிரீம் வாங்கி தந்த நடிகர் யாஷ் – வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல கன்னட நடிகரான யாஷ், தன் மனைவிக்கு சிறு கடை ஒன்றில் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில்…

பிரபல கன்னட நடிகரான யாஷ், தன் மனைவிக்கு சிறு கடை ஒன்றில் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், தன் மனைவியுடன் கோவிலுக்குச் சென்ற யஷ், அருகிலிருந்த சிறிய மளிகைக் கடை ஒன்றில் மனைவிக்குப் பிடித்த ஐஸ் கிரீம் வாங்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனைவி ஆசையை நிறைவேற்ற அங்கு வந்த யஷ்ஷைப் பார்த்ததும் ரசிகர்கள் ஒன்று திரண்டு விட்டனர். அவருடன் ஆசையாகப் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.