‘வித்தைக்காரன்’ பட இயக்குநர் வெங்கிக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை, நடிகர் சதீஷ் தனது தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. இவர் மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களின் இணை இயக்குநராக பணியாற்றினார். தற்போது சதீஷ் நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.
வித்தைக்காரன் திரைப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். வி.பி.ஆர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ், ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் மூலம் சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! – கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
https://twitter.com/Venki_dir/status/1757036481498272144
இந்நிலையில், ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கிக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை நடிகர் சதீஷ் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் வெங்கி, “My Lifetime Birthday Wish From My Thalaivar – Thalapathy @actorvijay Thanks For this Billion Dollar Gift Machi @actorsathish” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த 2014 ஆம் ஆண்டு, கத்தி திரைப்பட படப்பிடிப்பின்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







