முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வரும் விஜய்?

காட்டுக்குள் இருக்கும் வீட்டில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்து பலரையும் அழைத்து சிறப்பானதொரு கறி விருந்தை வைத்து ஆரம்பிக்கலாங்களா எனக்கூறி கோடாரியை தூக்கி திரையில் வீசினார் கமல். இதனைத் தொடர்ந்து பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து படமும் திரைக்கு வந்தது. கூட்டம் கூட்டமாக வந்த மக்களுக்கு சிறப்பானதொரு திரை விருந்தை வைத்து அனுப்பினார்கள் விக்ரம் படக் குழுவினர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து படத்தின் success மீட்டிங்கை நடத்தி முடித்து ஆரம்பிக்கலாங்களா எனக்கூறி அனைவருக்கும் விருந்து வைத்து அனுப்பினார் படத்தின் தயாரிப்பாளர் கமல்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானதும் எனக்கு போன் பண்ணாரு. உன் வேல முடிஞ்சது. படம் சூப்பர் ஹிட்டாகிடுச்சி, உடனே office-க்கு போய் அடுத்த படத்துக்கு எழுத ஆரம்பி. break எடுக்காதன்னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே நான் அடுத்த படத்துக்கு move ஆகுறேன், எல்லாருக்கும் ரொம்ப நன்றி.” எனக்கூறி move ஆகிவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத்தொடர்ந்து பேசிய கமல் பல்வேறு நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும், படம் கடந்து வந்த பாதை குறித்தும் பகிர்ந்துகொண்டதோடு, இப்படத்தின் வெற்றியை உடன் பணியாற்றிய அனைவருக்கும் காணிக்கையாக்கினார். மேலும், “தம்பி அடுத்த படம் எடுக்கப்போறார் எனும் போது, அதை நான் போட்டிப் படமாக நினைக்கவில்லை.. அந்த படத்தை ஜெயிச்சிட்டு நீங்க வரும் போது, அதுக்கப்புறம் வர்ற விக்ரம் (விக்ரம் இரண்டாம் பாகம்) எப்படி இருக்கும்ன்னு நீங்களே பாருங்க! so அதுக்கு நான் வாழ்த்த தவறினால் மல்லாக்க படுத்து துப்புறேன்னு அர்த்தம். அதுனால அதற்கும் நான் வாழ்த்து சொல்கிறேன். உங்களுக்கு எதுனா அந்த படத்துல பயமும் சந்தேகமும் இருந்தா அதற்கும் எங்கிட்ட நீங்க வாங்க. அதுவும் என் படம் தான்.” எனக்கூறி முடித்தார்.

இதைக்கேட்டவுடன் நமக்கு புரிந்தது என்னவென்றால் லோகி அடுத்து எழுதப்போவதாக சொன்ன கதை தளபதி விஜய்க்கு தான். lCU(Lokesh Cinematic Universe)- லோகேஷ் சினிமாடிக் யுனிவெர்ஸ் இதன் பிறகும் தொடருமா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது மக்களாக கொடுத்த பெயர். நிச்சயமா இதை தொடர்ற ஐடியா இருக்கு” எனக் குறிப்பிட்டிருந்தார். கமல் கூறியதையும், லோகி கூறியதையும் வைத்து பார்க்கும்போது, விஜய்க்காக லோகி எழுதப்போகும் அடுத்த கதை LCU-யில் தான் வரும் என்று கணிக்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். கார்த்தி மற்றும் கமலுக்கு மெஷின் GUN-ஐ கொடுத்த லோகி விஜய்க்கு மட்டும் காப்பும், உடைந்த வாளியும் கொடுத்துவிட்டார் என்று விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்ததாக செய்திகள் வந்ததை பார்த்தோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க குற்றச்சாட்டில் இருந்து விடுபட விஜயையும் லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் கொண்டுவரும் ஐடியாவோடு லோகி இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதன்படி ரோலக்ஸிடமிருந்து வரும் மற்றொரு சரக்கை இன்னொரு போலீஸ் கேங் பிடிக்கிறது. அந்த கேங்கிடமிருந்த சரக்கை அழித்து போலீஸையும் மக்களையும் விஜய் எப்படி காக்கிறார் என்பது தான் கதையாம். தற்போது இங்கிருக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் மாஸ்டர் படத்தில் வரும் ஜே.டி யாகவே வருகிறாரா அல்லது விஜய்க்காக புதிதாக ஒரு கேரக்டரையும் உருவாக்கி அதை இந்த கைதி- விக்ரம் கதைக்குள் கொண்டுவரலாமா என்ற விவாதம் தான் கடுமையாக சென்றுகொண்டிருக்கிறதாம்.

ஒருவேளை ஜேடியாகவே வருவாராயின் அந்த படத்தில் வில்லனாக வரும் விஜய் சேதுபதிதான் இந்த படத்திற்கு வில்லன் எனும்போது பெரும் லாஜிக் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க வேண்டுமானால் சந்தானமும், பவானியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை பிறவிகளாக காண்பிக்கப்படலாம் எனவும் கணிக்கப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் வரும் JD-யின் கடந்த கால வாழ்க்கை பற்றிய பதிவு பெரிதாக இருக்காது. அப்படியே 1986-ல் வெளிவந்த விக்ரம் படத்தை எடுத்துக்கொண்டால் அதன் கிளைமேக்ஸில் கமலை இரண்டு கதாநாயகிகள் துரத்துவார்கள். அதில் ஒருவருக்கு பிறந்தவர் தான் விக்ரம் 2022 படத்தில் கமலுக்கு மகனாக வந்த ACP பிரபஞ்சன் எனவும், இன்னொருவருக்கு பிறந்தவராக jD-இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் லோகியின் அடுத்த படத்தில் கமலின் மற்றொரு மகனாக JD கொண்டுவரப்படலாம் எனவும் சினிமா ஆர்வலர்கள் கணித்துவருகின்றனர். ஜெயிலில் இருக்கும் JD-ஐ விக்ரம் மீட்க, பவானியை கொன்ற JD-ஐயும், சந்தானத்தை கொன்ற விக்ரமையும் இருவரின் அப்பாவாக வரும் வயதான விஜய் சேதுபதி பழிவாங்க கிளம்புவதுமாக இந்த லோகி யூனிவர்ஸ் தொடரலாம் என்றும் கணிக்கப்படுகிறது. தற்போது கைதியில் வரும் டில்லி கேரக்டர் யாராக இருக்கும் என்ற குழப்பம் மிஞ்சுகிறது. அவர் 1986ல் வந்த விக்ரம் படத்தில் சலாமியா நாட்டில் மொழி பெயர்பாளராக வரும் ஜனகராஜின் மகனாக இருக்கலாம் எனவும் அவரின் இறப்புக்கு பிறகு விக்ரம் டில்லியை தத்தெடுத்து வளர்ப்பது போல் கதை அமைக்கப்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. இந்த LCU-வில் இதுபோல் இன்னும் என்னென்ன கிரிகாலன் மேஜிக் ஷோவெல்லாம் திரைக்கதையாக மாறி நம்மை தெறிக்கவிடப்போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீங்க ஆரம்பிங்க லோகி!

– வேல் பிரசாந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளோம்: நாராயணசாமி

Niruban Chakkaaravarthi

உலக புத்தக தின கொண்டாட்டம்

Saravana Kumar

முதன்முறையாக இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் சமந்தா

Halley Karthik