நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்; தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம் நடைபெற்று வருகிறது.  திரைப்பட நடிகர் விஜய் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிறந்தநாள்…

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம் நடைபெற்று வருகிறது. 

திரைப்பட நடிகர் விஜய் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம்
மற்றும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி
போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்காசி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் விஜயின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தங்கதேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.  தொடர்ந்து குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

மேலும், விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், 234 தொகுதிகளிலும் களம் காணவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்தலில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களை கௌரவப்படுத்தி கலை வழங்கினார்.

இந்நிலையில் அவரது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர
வேண்டும் என நோக்கத்துடன் திரைப்பட நடிகர் விஜய் தெரிவிக்கும் விதமாக
பெரியகுளம் பகுதிகளில் அவரது ரசிகர் மன்றம் சார்பாக பல்வேறு இடங்களில்
அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என
நோக்கத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.