நடிகர் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்களின் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி இருக்கிறது. அவரது ‘டாடா’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பு வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ரூ. 25 கோடி வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஸ்டார்’ திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கிஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ‘ப்ளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : “இனி மெழுகுவர்த்திக்கு மாற வேண்டியதுதான்.. ” – ரூ.45,000 மின்கட்டணம் செலுத்திய நபரின் பதிவு இணையத்தில் வைரல்!
தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் ‘மாஸ்க்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.