“விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரி

விடுதலை சண்டைப் பயிற்சியாளரை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை  வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு…

விடுதலை சண்டைப் பயிற்சியாளரை நடிகர் சூரி பாராட்டியுள்ளார்.

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை  வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதையை 2 பாகங்களாக வெளியிடவுள்ள நிலையில் மார்ச் 31ம் தேதி படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://twitter.com/sooriofficial/status/1644205135386808321

இந்த படத்தை இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்  வழங்குகிறது. சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ள விடுதலை திரைப்படத்தின் சண்டை காட்சிகளில் நடிகர் சூரி சிறப்பாக நடித்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பலர் விடுதலை திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பற்றி வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதுக்கு முழு காரணம் மாஸ்டர் பீட்டர் ஹெயின் மற்றும் அவரின் குழுவினரின் அசாத்திய உழைப்பு தான். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.