டும்…டும்…டும்…| நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்தார் நடிகை #AditiRao ஹைதரி!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில்…

Actor Siddharth , actress Aditi Rao Hydari , marriage

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சென்ற ஆண்டு வெளியான ‘சித்தா’ திரைப்படம் வெற்றிக்குப் பிறகு சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கினர். மேலும், இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.

இதையும் படியுங்கள் : ரஜினிகாந்த் நடிக்கும் #Vettaiyan இசை வெளியீட்டு விழா – எப்போது தெரியுமா?

இதனைத் தொடர்ந்து, இன்று நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். சித்தார்த் – அதிதி தம்பதிக்கு ரசிகர்களும் திரைத்துரையினரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.