நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்த கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கார் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி, பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாக்கோ, அவரது தந்தை சிபி சாக்கோ, தாய், சகோதரர், ஓட்டுநர் உட்பட 5 பேரும் காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக பெங்களூரு சென்று கொண்டிருந்த போது தர்மபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோடு அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவரது தந்தை உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் தற்போது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.









