நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வெளியீடு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்…

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கடந்த மாதம் வெளியிட்டுள்து. மேலும், படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 

இந்த படத்தில் ஜெயில் வார்டனாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும், ஆக் ஷன் கலந்த படமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் போஸ்டரில் கூட ரஜினிகாந்த் பின்னால் கைகட்டியவாறு ஸ்டைலாக நடந்து வருவது போன்று வெளியிடப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் அதிரடியான தீம் மியூசிக் நடிகர் ரஜினிகாந்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்திற்கான தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.