ரைசா மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மருத்துவர் பைரவி செந்தில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா மூன்று நாட்களில் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்டு, சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் கூறியுள்ளார்.
தவறான சிகிச்சைக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தனது வழக்கறிஞர் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ள பைரவி, வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாக தெரிவித்துள்ளார்.

ரைசாவிற்கு ஏற்பட்டது பயப்படக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை என்றும் இயற்கையாகவே குணமடையும் என்றும் கூறியுள்ளார். ரைசா மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







