முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு டாக்டர் பட்டம்

சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டத்தை நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது. 

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் தன்மை கொண்ட கலைஞனாக உள்ளவர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்களை ராகவா லாரன்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சினிமாவைத் தாண்டி மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக அறியப்பட மற்றொரு காரணம் அவரின் உதவி செய்யும் குணம் தான். குறிப்பாக மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார். அவர்களுக்கென்று தனியாக இல்லங்கள் நடத்தி வருவதோடு அவர்களை கனிவோடு கவனித்துக்கொள்கிறார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இணைந்து அவருக்கு இந்த விருதை வழங்கி உள்ளனர். ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படப்பிடிப்பில் இருப்பதால் டாக்டர் பட்டத்தை அவரது அம்மா பெற்றுக் கொண்டார். டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராகவா லாரன்ஸ்க்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

” நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் “ – சாக்‌ஷி மாலிக் விளக்கம்

Web Editor

காதலனுடன் சென்ற மகள்; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்

G SaravanaKumar

கர்நாடகாவில் பாஜக எதிர்ப்பு அலை; காங்கிரசின் வெற்றி நாட்டிற்கு தேவை -நியூஸ்7 தமிழுக்கு ஜோதிமணி எம்பி பிரத்யேக பேட்டி!

Web Editor