விடைபெற்றார் நடிகர் மனோபாலா – உடல் தகனம்..!!

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். சாலிக்கிராமத்தில் உள்ள வீட்டில் மனோபாலாவின் உடல்…

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். சாலிக்கிராமத்தில் உள்ள வீட்டில் மனோபாலாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்றும் பலர் அவரது உடலுக்கு நேரில் மலரஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சூரி, இயக்குநர் பாக்கியராஜ், அவரது மகன் சாந்தனு, கோவை சரளா, யோகி பாபு, கனல் கண்ணன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோவை சரளா, ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் தேனப்பன், பேரரசு, பசுபதி உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அவரது வீட்டிலிருந்து 80 அடி சாலை, ராஜமன்னார் சாலை, ஆற்காடு சாலை வழியாக வளசரவாக்கம் மின் மயானத்துக்கு மனோபாலாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மனோபாலாவின் உடலுக்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.