“டாடா” படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி டாடா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் கவின் அபர்ணா தாஸ் நடிப்பில் டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியானது.…

நடிகர் கார்த்தி டாடா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் கவின் அபர்ணா தாஸ் நடிப்பில் டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியானது. ரெட் ஜெயின்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது. பாக்யராஜ், ஐஷ்வர்யா, பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

வெளியான முதல் நாள் முதலே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல முன்னணி திரை கலைஞர்கள் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். பிற மாநிலங்களுக்கான ரீ-மிக்ஸ் உரிமைகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

https://twitter.com/Kavin_m_0431/status/1630876255641038849?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630876255641038849%7Ctwgr%5Efea3c6cbed3ad0efdaa149da0cc74c5557fc4018%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fmar%2F02%2Fdada-movie-kavin-4010046.html

இந்நிலையில் நடிகர் கார்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாக டாடா படம் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். இதுபோன்ற எழுத்தையும், இயக்கத்தையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கவின் உள்ளிட்ட அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவை ரீ-ட்விட் செய்துள்ள கவின், “5 நிமிட அழைப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். இந்தப் படத்தை நினைவில் வைத்திருப்பேன் என நீங்கள் சொன்னதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். வாழ்க வளமுடன் வந்தியத்தேவா.” என கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.