தனது மனைவியிடம் இருந்து மகளை காப்பாற்ற வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி புகார் மனு அளித்துள்ளார்.
பிரபல நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
https://www.youtube.com/watch?v=N2-Hy6ah-V4
இந்நிலையில், தனது மனைவியிடம் இருக்கும் 12 வயது மகளை காப்பாற்ற வேண்டி, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மனைவி நிதியாவின் தவறான வழிகாட்டுதலில் தனது மகள் வளர்ந்து வருவதாகவும், அவரை மீட்டு உரிய மனநல சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.







