நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அர்ஜுனின் வீட்டில் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/annamalai_k/status/1551094082331906050?t=QvABDRgw_mywzm11MDopKg&s=08
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் அர்ஜூன் அவர்களின் தாயார் திருமதி லட்சுமி தேவம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி வேதனையும், மன வருத்தமும் தருகிறது. அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







