நடிகர் அஜித் குமாரின் ரீசண்ட் கிளிக்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

‘குட் பேட் அக்லி’  திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே…

‘குட் பேட் அக்லி’  திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார்.  ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

‘குட் பேட் அக்லி’  திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாகவும்,  இந்த திரைப்படத்தில் 3 வேடங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படியுங்கள் : இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்!

மேலும்,  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து,  நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.  இந்நிலையில்,  அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.  கட்டம் போட்ட சட்டையில்,  சிரித்த முகத்துடன் காணப்படும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.