ஷாருக்கானுக்கு வில்லனாக களமிறங்கும் அபிஷேக் பச்சன் – வெளியான புதிய அப்டேட்!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ திரைப்படங்கள்…

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ஒரே ஆண்டில் மூன்று வெற்றி திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்நிலையில், ஷாருக்கானின் புதிய திரைப்படத்தை ‘கஹானி’, ‘ஜானே ஜான்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள், சுஹானா திரையுலகில் அறிமுகமாகிறார். அனிருத் படத்துக்கு பின்னணி இசையமைக்க உள்ளதாக  கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் 16லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

தற்போது இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நடிகர் அபிஷேக் பச்சன் உறுதி படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.