டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்வதேச இளம் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கிரெட்டாவின் ட்வீட்டினை மாற்றியமைத்து பதிவிட்டதாகவும், இந்த பதிவு விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான கருத்தினை உருவாக்கியதாக பெங்களூரை சேர்ந்த 22 வயதான இளம் சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவியை டெல்லி காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திஷாவின் தரப்பிலிருந்து ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். இது குறித்து இன்று நடைபெற்ற விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், ரூ.1 லட்சம் பிணை தொகையாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.