போலி பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை மாநகராட்சி ஆணையர்

மதுரை பிறப்பு சான்றிதழ் பெற்றுதருவதாக கூறும் முகவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது, “மதுரை…

மதுரை பிறப்பு சான்றிதழ் பெற்றுதருவதாக கூறும் முகவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது,

“மதுரை மாநகராட்சி மூலம் ஆன்லைனில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் எந்தவித முறைகேடுமின்றி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மாநகராட்சியின் பெயரை பயன்படுத்தி போலியாக பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பிறப்பு சான்றிதழ் பெற்றுதருவதாக கூறும் முகவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

போலி சான்றிதழ்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ஆன்லைன் தளத்திலயே போலி மற்றும் அசல் சான்றிதழ்கள் தொடர்பான சந்தேகங்களை அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் போலி சான்றிதழ்கள் உருவாக்கியவர்களும் எவ்வித தொடர்பும் இல்லை.”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.