உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம்!

சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த வாரம் சென்னையில்…

சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் பணி என தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது டெல்லி உள்ளிட்டபல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி மீது கோரி என் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் அரசாங்கம் மற்றும் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என சமீபத்தில் Shaheen Abdulla Vs UOI என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை கடிதத்தில் அவரகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் இருக்கும். எனவே அரசின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.