பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அரவிந்தசாமி எனும் தொழிலாளி உயிரிழந்த செய்தி, மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது போன்ற தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்க, பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆய்விற்கு பின்னர், வெடி விபத்தை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








